We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!
We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

Wednesday, November 23, 2022

செம்பு(COPPER)

 செம்பு 

 (COPPER) 










        சுரங்கங்களில்  கிடைக்கின்ற  இந்த  உலோகம்  நாம்  அதிகமாகப்  பயன்படுத்தக்கூடிய உலோகம்.  இது  தங்கம்,  வெள்ளி,  வெண்வங்கம்,  காரீயம்,  நாகம்,  இரும்பு,  நிமிளை,  கெந்தி  முதலிய  பொருட்களுடன்  கலந்து  கிடைக்கிறது.  இக்கலப்பிலிருந்து  செம்பை  தனியாகப்  பிரித்தெடுக்கின்றனர்.

           வட  அமெரிக்காவிலும்,  நேபாளத்திலும்  செம்புத்  தாது  அதிகமாக  கிடைக்கிறது.   இதில்  நேபாளத்தில்  கிடைப்பதுவே  அன்றும்  இன்றும்  சிறந்த  வகை  என்று  (அன்றும் -  இன்றும்)  சொல்லப்படுகிறது.   'இங்கிலீஸ்  முறை,  ஜெர்மன்  முறை'  என  இரு  முறைகளில்  கலப்புத்  தாதுவிலிருந்து  செம்பு  பிரிக்கப்பட்டு  நமக்கு  கிடைக்கிறது.  

            இது  வெடியுப்பு  திராவகத்தில்  மட்டுமே  கரையும்.  இது  கரையும்  போது  சிவந்த  புகை  உண்டாகும்.   கெந்தக  திராவகத்தில் காய்ச்சும்  போது  1090 டிகிரி  வெப்பம்  தேவைப்படும்.

          இந்திரகோபம் (பட்டுப்பூச்சி),  பூநாகப்  பூச்சி (நாங்கூழ் பூச்சி),  மயில்  இறகு,  தலை  மயிர்  மற்றும்  சில  மூலிகைகளிலிருந்தும்  செம்புச்  சத்து  எடுக்கப்படுகிறது.

        சுத்தமாக  தூய்மை  செய்யப்பட்ட  செம்பானது  வெள்ளி,  தங்கம்  முதலியவைகளுடன்  மிதமான  அளவோடு  முறையாக  சேர்க்கப்பட்டால்  அதற்குரிய  குணத்தைப்  பெறுகிறது.

             தாமிரம்,   அவுதும்பம்,   உதும்பம்,   இரவி,   ராசி,   இரவிப்பிரியம்,  எருவை,  சீருணம்,  சீருணி  கற்பம்,  சுலபம்,  தாம்பிரம்,  பரிதி,  விடம்  என்ற  பெயர்களும்  செம்புக்கு  உண்டு.

             வெப்ப   வீரியமுள்ள  இது  கார்ப்புச்  சுவையுடன்  இருக்கும்.  இது  வெப்ப  உடலினர்க்கு  ஆகாது.  வாந்தி  உண்டாக்குவது  இதன்  தீய  குணமாகும்.


" தாம்பரத்தாரற்  சோரிபித்தஞ் சந்நி    வழுவைகபம் 

  வீம்பார்பி  லீகமந்தம்  வெண்மேகந் --- தேம்பழலை

  சூதகநோய்  புண்கிரந்திதோடசுவா  சங்கிருமி

  தாதுநட்டங்  கண்ணோய்போஞ்  சாற்று. "  


          குட்டம்,  பெருநோய்,  பித்தவிகற்பம்,  கபவிகற்பம்,  செந்நீர்ப்பித்தம்,  பெருவயிறு,  குன்மம்,  புண்கள்,  தாது  இழப்பு,  இருமல்,  ஈளை,  இளைப்பு,  கண்நோய்  முதலியவைகளைப்  போக்கும்.

                அயம்,  சூதம்,  தங்கம்,  நாகம்  முதலியன  நட்புச்  சரக்குககள்.

                காரீயமும்,  வெடியுப்பும்  பகைச்  சரக்குகள்.

        இந்த  உலோகத்தில்  வெளுப்பாக  அல்லது  கருப்பாக  உள்ளதும்,   அடித்தால்  விரிந்து  கொடுப்பதும்,   கழுவக்  கழுவக்  கருத்துக்  காணப்படுவதும்  மருத்துவத்திற்கோ  வேதியியலுக்கோ   பயன்படாது.




Share:

இரசவாத இரகசியங்கள் ஏழு

 இரசவாத இரகசியங்கள் ஏழு 



1.குற்றமில்லாத சிவப்பு நிற இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால்                  தங்கம் உண்டாகும்.

2.குற்றமுள்ள இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால் செம்பு  உண்டாகும்.                            

3.குற்றமுள்ள இரசம் சிறு அளவிலும் குற்றமுள்ள கெந்தி பெரு அளவிலும்               சேர  அயமுண்டாகும்.

4.குற்றமுள்ள இரசம் பெரிதும், குற்றமுள்ள கெந்தி சிறிதும்    சேர                                   வெள்ளீயமுண்டாகும்.

5.குற்றமுள்ள இரசம் அதிகமாகவும், அதை விடக் குற்றம் அதிகமுள்ள கெந்தி        குறைவாகவும் சேர காரீயம் உண்டாகும்.

6.குற்றமுள்ள இரசமும், அதைவிட அதிக குற்றமுள்ள கெந்தியும்     சேர                     நாகமுண்டாகும்.

7.சுத்தமான இரசமும் தாளகமும் சம அளவில் சேர வெள்ளி உண்டாகும். 






Share:

SEVEN SECRET of TAMIL ALCHEMY from Tamilnadu

                         SEVEN SECRET  of  ALCHEMY

 IN TAMIL  PEOPLES ALCHEMY 




1. An equal amount of pure red Mercury and pure Sulfur makes Gold.

2. Copper is formed when impure Mercury and impure Sulfur are mixed in equal quantities.

3. Iron is formed when small quantities of impure Mercury and large quantities of impure Sulfur 
    are mixed in equal quantities.

4. Tin Stannum is caused by excessive amounts of contaminated Mercury and small amounts of 
    contaminated Sulfur.

5. Lead is formed when high amounts of contaminated Mercury and low levels of highly 
    contaminated Sulfur are present.

6. Zinc is formed when highly contaminated Sulfur is mixed with impure Mercury.

7. When pure Mercury is mixed in equal quantities and in arsenic Trisulphide, Silver is formed.







Share:
< நீலம், பச்சை, சிகப்பு > இந்த மூன்று வண்ணங்களில் ரசவாத ரகசியம் உண்டு

Pageviews

Categories