We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!
We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

Sunday, November 10, 2024

ஐம்பொன் இரகசியம்

 ஐம்பொன் இரகசியம்


  இரும்பு, ஈயம், செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம்.

பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.

வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனி கிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்கிர (வெள்ளி)கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்து கொள்கின்றனர்.

இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ,  காப்பாகவோ,  தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம். ஐந்து உலோகங்களின் இரகசியம் மற்றும்

இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நம் முன்னோர் அறிந்திருந்தனர் அவற்றின் விளக்கத்தை இங்கு காண்போம். 


 இரும்பு

இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான். அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள் நெருங்காமல் இருக்க இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள். ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும்  பெரியவர்கள் கூறுவார்கள்.


“இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வை” என்ற பழமொழி உள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் இடி மின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும். இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள். ஆனால் மற்ற உலோகத்தோடு கலப்பதால் அதிக நன்மை பயக்கும்


 ஈயம்

இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை, இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது. மனிதனின் உயிர் சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது.


 செம்பு

செம்பு உலோகத்தை பற்றி கூற நிறைய உள்ளன. இருப்பினும் இதன் சிறப்பே சக்தியை விழிப்புடன் வைக்க உதவுகிறது. கவனிக்க வெப்பத்தை மேலே கொண்டு வராது. இதன் மிதமான வெப்பத் தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது, மனித உடலை சுற்றியுள்ள காற்று மண்டலத்தை பலபடுத்தும், மூளையின் செயல் திறன் அதிகமாகும்.


 வெள்ளி

வெள்ளி உலோகத்தையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தியதாகவும். மேலும் இவ்வுலோகத்தை அதிகம் பயன்படுத்தவில்லை ஏனெனில் இதன் அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது. இதற்கு மானிடர்களின் உணர்ச்சி அலைகளை கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பதை அறிந்திருந்தனர். 


 தங்கம்

தங்கம் என்ற உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு அனுப்பமுடியும். அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது துன்பங்களை கடவுளிடம் தெரிவித்து வரம் கேட்பார்கள். கடவுள் சிலைகளுக்கும் தங்க நகைகள் போடுவது இதனால்தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறையாக கருதினர். கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாக கருதி மனிதர்களின் எண்ணங்களை அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம் அனுப்பப்படும் என்று கருதினர்.


இப்படி ஐம்பொன் உலோகமும் மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர். மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர். இது தமிழர்களின் அனுபவ முறைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது.


Share:

Related Posts:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

< நீலம், பச்சை, சிகப்பு > இந்த மூன்று வண்ணங்களில் ரசவாத ரகசியம் உண்டு

Pageviews

13454

Categories